Apps

பிளிப்கார்ட்டின் அதிரடி ஆஃபர்களால் ஆடிப்போன மக்கள்

பிளிப்கார்ட் நிறுவனம் ‘நேஷனல் ஷாப்பிங் டே’ என்ற பெயரில் சுதந்திர தினம் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் இருக்கும். பிளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களாக இருந்தால் ஒரு நாள் முன்பே ஆஃபர் தொடங்குகிறது. 


இதில் அமேசானுக்குப் போட்டியாக மிகமிக குறைந்த விலையில் பல பொருட்களை விற்பனை செய்கிறது. அமேசானின் சுதந்திர தின ஆஃபர் விபரங்களை தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும். அமேசானில் எந்தஅளவுக்கு சலுகைகள் உள்ளதோ, அதே அளவுக்கு பிளிப்கார்ட்டிலும் அதற்கு ஏற்ப அளவில் உள்ளது. 

பிளிப்கார்ட்டின் அதிரடி ஆஃபர்களால் ஆடிப்போன மக்கள்

அதன்படி, ஸ்மார்ட்போன் விரும்பிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போனுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரிஜனல் விலை 11,999 ரூபாயாகும். தற்போது 9,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் செல்பி கேமரா உள்ளது. 

இதே போல், 4ஜிபி ரேம் கொண்ட ஹானர் 20i ஸ்மார்டபோனின் விலை 16,999 ரூபாயிலிருந்து 12,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 12,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


சாம்சங் A சீரிஸ் மாடல்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகறிது. அதிகபட்சமாக விவோ வி15 ஸ்மார்ட்போனுக்கு 4,000 ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் உள்ளது. 26,990 ரூபாய் மதிப்புள்ள விவோ வி15 ஸ்மார்ட்போனை 19,990 ரூபாய்க்கு வாங்கலாம். 

அமேசானுடன் ஒப்பிடுகையில், பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட்டில் 39 ஆயிரம் ரூபாய் வரையில் சலுகைகள் உள்ளது. அமேசானில் 20 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால், லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன், சாம்சங் M சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் அமேசானில் தான் கிடைக்கிறது. 

Related posts

பல சாதனங்களில் ஒரே வாட்ஸ் ஆப் அக்கௌண்ட்டை பயன்படுத்தலாம்!!

TechNews Tamil

Amazon Prime Day என்ற பெயரில் நூதனக் கொள்ளையிடும் போலி இமெயில்!

TechNews Tamil

ஃபேஸ்புக் மெசஞ்சர் ஐஒஎஸ் பதிப்பில் ப்ரோஃபைலை லாக் செய்யும் வசதி!!

TechNews Tamil