Information Technology

புது முயற்சியாக BSNL உடன் கூட்டு சேர்ந்த Paytm !!

அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்க சிறப்பான ஆஃபர்களை வழங்குவதுடன், புதுமுயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் வைஃபை ஆன் போர்டிங் அம்சத்தை வழங்கவுள்ளது.

தற்போது இந்த புதிய முயற்சிக்காக, பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து உள்ளது. அதாவது இந்த புது முயற்சியால் சில பகுதிகளில் பிஎஸ்என்எல் இன் பொது வைஃபையை பயன்படுத்த முடியும்.

புது முயற்சியாக BSNL உடன் கூட்டு சேர்ந்த Paytm !!


பிஎஸ்என்எல்-ன் வைஃபை ஹாட்ஸ்பாட் இருக்கும் பட்சத்தில் Paytm நிறுவனம் அறிவிப்புகளை காட்டும், அதன்படி,  Paytm ஆப் மூலம் பிளான்களை தேர்வு செய்து, Wi-Fi வசதி பெறலாம்.

வைஃபை கிடைக்கக்கூடிய தகவல்கள் Paytm ஆப்பில் பயனர்களின் ஸ்க்ரீனிகளில் பாப் அப் ஆக வந்து சேரும்.

பிளானை Paytm வழியாக பணம் செலுத்தி ஹாட்ஸ்பாட் இணைப்பை பெறுவதோடு மட்டுமல்லாமல், பயனர்கள் டேட்டா பயன்படுத்தும் அளவு மற்றும் வேலிடிட்டி போன்றவையும் Paytm ஆப் மூலம் பெற முடியும்.

இந்த அம்சத்தின் மூலம் பிஎஸ்என்எல்லின் டேட்டா ரோமிங்கையும் பெற முடியும்.


Related posts

கொரோனா ஊரடங்கு: ரூ. 10 இலவச டாக்டைம், இலவச இன் கம்மிங்க்.. சலுகைகளை இறைக்கும் பி.எஸ்.என்.எல்.

TechNews Tamil

ஜியோஃபைபர் சலுகைகள் இன்னும் ஒரு மாதம் நீட்டிப்பு!!!

TechNews Tamil

VLC Media Player-ஐ உடனே Uninstall செய்ய வேண்டும்!!!

TechNews Tamil