பேடிஎம் நிறுவனம் தற்போது பண வரித்தனைக்குப் பயன்படுத்தப்படும் செயலிகளில் முக்கிய செயலியாக இருந்து வருகின்றது, மேலும் இந்த செயலியானது ஆன்லைன் பரிவர்த்தனைக்காக மட்டுமல்லாது ரீசார்ஜ், ஆன்லைன் கடைகள், மின் கட்டணம் எனப் பலவற்றிலும் பண செலுத்தப் பயன்படுகின்றது.
அதிக அளவில் பயனர்களைக் கொண்டுள்ள இந்த பேடிஎம் நிறுவனம் சமீபத்தில் அதன் மினி ஆப் ஸ்டோரை அறிமுகம் செய்தது.

ஆன்லைன் பண பரிவர்த்தனையினை நெட் பேங்கிங்க், மொபைல் பேங்கிங்க் எனப் பல வகைகளில் செய்ய முடியும் போதில், மிக எளிதில் அனைவராலும் பண பரிவர்த்தனை செய்யும் செயலியாக திகழ்ந்துவந்த பேடிஎம் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆன்லைன் சூதாட்ட கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கிய காரணத்தினால்தான் Paytm அகற்றப்பட்டுள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இது இன்னும் பயன்பாட்டிலேயே உள்ளது.
ஏற்கனவே பயன்படுத்தியவர்கள் பேடிஎம்மை பயன்படுத்த முடியும் என்றும், புதிதாக டவுண்ட்லோடு செய்ய நினைப்பவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த Paytm தரப்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், பேடிஎம் பயனர்கள் சற்று வருத்ததிலேயே இருந்துவருகின்றனர்.