கொரோனா வைரஸ் காரணமாக 3 மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தளர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும் தளர்த்தப்பட்ட ஊரடங்கால் கொரோனாத் தொற்று அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பலவிதமான சேவைகளையும் இந்திய அரசாங்கம் செய்து வருகின்றன.
அந்த வகையில் ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் புதிய வசதிகளை ஒரு சில வங்கிகள் அறிமுகம் செய்தன.

அதாவது கார்டு அல்லது பின் நம்பரை பயன்படுத்தாமல் செல்போனில் வங்கிகளின் செயலியை டவுன்லோடு செய்து, ஏடிஎம் திரைக்கு சென்று அதில் காட்டும் கியூ ஆர் கோட்டை மொபைல் செயலி மூலம் ஸ்கேன் செய்தால், ரூபாய் எடுப்பது, இருப்புத்தொகை கண்டறிதல் என அனைத்தையும் செயலிலேயே பதிவு செய்து பணத்தினை எடுத்துக் கொள்ள முடியும்.
அதாவது ரிசர்வ் வங்கியால் அங்கீகரிப்பட்ட எம்பேஸ் பேமண்ட் சிஸ்டம் என்ற நிறுவனம் பிரபல மாஸ்டர் கார்ட் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த கார்ட்லெஸ் ஏடிஎம் சேவையை வழங்குகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலேயே கியூஆர் கோடு மூலம் பணத்தை எடுக்கும் வசதி இந்தியாவில் செயல்பாட்டுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.