ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் பயனர்கள் பலரையும் கவர்ந்திழுக்கவே செய்துள்ளது, இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தே வருகிறது.
வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்கள் மிக மலிவான விலை என்றாலும், அதனைவிட அதிக விலையில் விற்பனையாகும் ட்ரு வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ்களை தற்போது அறிமுகம் செய்து உள்ளது.

டிரான்ஸ்சனின் துணை பிராண்டான ஓராய்மோ பட்ஜெட் விலையில் தனது ட்ரு வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஓராய்மோ நிறுவனம் தற்பொழுது, புதிய Oraimo ஏர் பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் என்ற ப்ளூடூத் 5.0 இயர்பட்ஸை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
Oraimo அறிமுகம் செய்துள்ள இந்த புதிய Oraimo ஏர் பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் புதிய வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
எச்.டி ஆடியோ தரம் இந்த ப்ளூடூத் ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் எச்.டி தரத்தில் பயனர்களுக்கு ஆடியோ சிறப்பாக உள்ளது.