Information Technology

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு சலுகைகள்!!

ஜியோ அவுட் கோயிங்க் காலுக்கு கட்டணம் அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு நெட்வொர்க்கும் முடிந்த அளவில் சலுகைகளை வாரி இறைத்து வருகிறது.

தற்போது ஒவ்வொரு நிறுவனமும் ஆஃபர்களை அளித்து வருகிறது, அந்த வகையில் பிஎஸ்என்எல் அனைவருக்கும் பிடித்த ஒரு நெட்வொர்க்காக மாறி வருகிறது.

இவை ஒருபுறம் இருக்க, பிஎஸ்என்எல் அதிக அளவில் நஷ்டத்தினை சம்பாதித்து வருவதால், அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தினை அறிவித்துள்ளது.

விருப்ப ஓய்வு திட்டத்தின்படி ஓய்வு பெறுவோருக்கு, சில சலுகைகளையும் இந்த நிறுவனம் தற்போது அளித்துள்ளது

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு சலுகைகள்!!

இதுபற்றி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பி.கே. புர்வார், கூறியதாவது, “பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பலரும் இந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது பணி ஓய்வு காலம் வரையிலான காலத்திற்கு ஆண்டுக்கு 25 நாட்களும், பணி நிறைவு செய்தபின்னர் ஆண்டுக்கு 35 நாட்களும் ஊதியம் வழங்கப்படும்.

இதுகுறித்து ஆழ்ந்து கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும். குறைந்த பட்சம் 80,000 பேர் இதன்மூலம் பயனடைவார்கள்.

இதன்மூலம் நிறுவனமும் நஷ்டத்தில் இருந்து ஓரளவு தப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என அவர் கூறினார்.

Related posts

ஊரடங்கு உத்தரவு: ரீசார்ஜ் செய்யத் திணறும் வாடிக்கையாளர்களுக்கு Jio கொண்டுவந்த புதிய ரீசார்ஜ் முறை!!

TechNews Tamil

Work@Home பயனர்களுக்கு ஏர்டெல் அறிவித்துள்ள ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்பிலான பேக்குகள்!!

TechNews Tamil

செம ஐடியா… எஸ்எம்எஸ் கனெக்டிவிட்டி மூலம் விவோவின் மொபைல் விற்பனை துவக்கம்..!!

TechNews Tamil