ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் மாடல் 2020 மார்ச் மாத இறுதிக்குள் அறிமுகம் ஆக உள்ளதாக ஒப்போ நிறுவனம் கூறியுள்ளது.
இந்த வாட்ச் குறித்த புகைப்படத்தினை ஒப்போ நிறுவன துணை தலைவர் ப்ரியன் ஷென் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் ஆனது வளைந்த ஸ்கிரீன் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் கோல்டு கேசிங் கொண்டதாக உள்ளது மற்றும் வாட்ச்சின் இரண்டு புறத்திலும் இரண்டு பட்டன்களை கொண்டுள்ளது.
மேலும் கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்ற அறிவிப்பினைக் காண ஒரு பட்டன் நோட்டிஃபிகேஷன் லைட் கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும், வாட்ச்சில் சிலிகான் ஸ்டிராப் பொருத்தப்பட்டுள்ளது.
லெதர் ஸ்டிராப்பும் ஒரு விருப்பமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொழில் நுட்பங்கள் மற்றும் அமைப்புகள் பயனர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
இதுகுறித்த அறிமுகத்தினை எதிர்பார்த்து பயனர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.