அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டுக்கு போட்டியாக, பேடிஎம் தீபாவளி விற்பனையை துவங்கியது.
இதில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற, இந்தப் பட்டியலில் தற்போது ஒப்போ நிறுவனத்தின் சலுகைகளும் இடம்பெற்றுள்ளது.
அந்த பட்டியலில் ஒப்போ ரெனோ 2, ஒப்போ ஏ9 2020, ஒப்போ ரெனோ 10 எக்ஸ் ஜூம் மற்றும் ஒப்போ கே3 போன்ற ஸ்மார்ட்போன்கள் இடம் பெற்றுள்ளது..

எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத கேஷ்பேக் கிடைக்கும். அமேசான் மற்றும்
ஃப்ளிப்கார்ட் வழியாக வாங்கினால் நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகளும்
கிடைக்கும்.
ரெனோ 2 சீரிஸ், ஏ 2020, ரெனோ மற்றும் ரெனோ 10 எக்ஸ் ஜூம் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.7,000 வரை
எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் கிடைக்கும்.
ஒப்போ கே 3 மற்றும் ஏ3எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1,000 என்கிற தள்ளுபடியும், ஒப்போ கே1 மீது ரூ.4,000 தள்ளுபடியும் கிடைக்கும்.
மேலும் இதில் கூடுதல் சலுகையாக, ஸ்மார்ட்போன்களுக்கு சேதம் அடையாத அளவு முழுமையான பாதுகாப்பு மற்றும், ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனிற்கு ஒரு முறை ஸ்கிரீனை மாற்றித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.