Oppo Reno A ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த Oppo Reno A வாட்டர் ட்ராப்- ஸ்டைல் டிஸ்பிளே நாட்ச் மற்றும் இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரைக் கொண்டுள்ளது.
Oppo Reno A-வின் விலை 6 ஜிபி ரேம் + 64 ஜிபி – ரூ. 26,000
Oppo Reno A-வின் 128 ஜிபி சேமிப்பு – ரூ. 25,700
இது அக்டோபர் 18 முதல் நாட்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மேலும் இது 6.5inch full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளேவில் கார்னிங்க் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளது.
இது octa-core Qualcomm Snapdragon 710 SoC மூலம் இயங்கும் தன்மை கொண்டது.
இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாவது சென்சார், டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 25 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.
இதனை மைக்ரோ கார்டு மூலமாக 256 ஜிபி வரை நீடிக்க முடியும். 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, Micro-USB போன்ற இணைப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
இது 3,600mAh பேட்டரியை கொண்டு இருக்கக்கூடியதாக உள்ளது.