இந்தியாவில் ஓப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
1.ஓப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை – 40,790
பாதுகாப்பினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் v5 கொண்டதாக உள்ளது, மெமரியினைப் பொறுத்தவரை இது 128 ஜிபி கொண்டதாக உள்ளது.

ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு வி10 கலர் ஓஎஸ் இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. இது அட்ரினோ 620 GPU கொண்டுள்ளது.
அத்துடன் 6.5 இஞ்ச் full-HD AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இது octa-core Qualcomm Snapdragon 765 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இது 4020 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக்கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 எம்பி இரண்டாவது கேமரா, 8 எம்பி மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது வைஃபை 802.11, ac/b/g/n/n 5GHz, மொபைல் ஹாட்ஸ்பாட், வித் ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ- யூஎஸ்பி, யூஎஸ்பி வகை-சி போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.