2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் ஒப்போ நிறுவனம் தனது ஒப்ரோ ரேனோ 3ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது.
பிப்ரவரி மாதம் இந்தியாவில் ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒப்ரோ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 2400 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 48 எம்.பி பிரதான கேமரா, 13 எம்.பி டெலிஃபோட்டோ லென்ஸ், 8 எம்.பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 2எம்பி மோனோக்ரோம் சென்சார் போன்றவற்றை உள்ளது.
மேலும் முன்புறத்தில் 44எம்பி டூயல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் கொண்டதாக உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மையானது.
இது 4025எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, இணைப்பு ஆதரவைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது.