Mobile

ஜப்பானில் வெளியாகிய ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போனை ஜப்பானில் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 2400 × 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 5ஜி சிப்செட் வசதியுடன் அட்ரினோ 620 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது.

ஜப்பானில் வெளியாகிய ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போன்!

ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போன் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

மேலும் ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

கேமரா எனக் கொண்டால் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் இது 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் இது 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ரியல்மி 5ஐ!!

TechNews Tamil

50எம்பி கேமராவுடன் இந்தியாவில் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

சீனாவில் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள விவோ ஒய்52 எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil