Mobile

இந்தியாவில் ஜனவரி 18 ஆம் தேதி களமிறங்கும் ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனம் ஓப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை ஜனவரி 18 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஓஎல்இடி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் மேலும் 2400 ×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதிப்பிப்பு வீதத்தினைக் கொண்டதாகவும் மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் ஜனவரி 18 ஆம் தேதி களமிறங்கும் ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன்!

கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் பிரதான கேமரா வசதி கொண்டதாகவும், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா கொண்டதாகவும் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டதாகவும், இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இது ஒப்போ ரெனோ 5 ப்ரோ 4350 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 65 வாட்ஸ் சூப்பர் ப்ளாஷ் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

ரூ.3000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஐரோப்பாவில் வெளியாகியுள்ள போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் வெளியாகியுள்ள ஒப்போ ரெனோ 5ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil