Mobile

இந்தியாவில் களம் இறங்கியது ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 1080 × 2400 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் 90Hz refresh rate கொண்டுள்ளது.

மேலும் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

இந்தியாவில் களம் இறங்கியது ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி சென்சார், 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டதாகவும் மேலும் 32எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி,புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, டூயல் சிம், யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

மீண்டும் விற்பனையைத் துவக்கிய Redmi Note 8 Pro!

TechNews Tamil

ரூ. 2000 வரை விலை குறைக்கப்பட்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஒப்போ F11 Pro மீது நிரந்தர விலைக்குறைப்பு

TechNews Tamil