மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனம் பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவில் ஒப்போ ரெனோ 5ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ரெனோ 5ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஒப்போ ரெனோ 5ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவினையும், விளிம்புகளில் 55.9 டிகிரி 3D வளைவைக் கொண்டதாகவும் உள்ளது.
OPPO ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது முழு எச்டி + டிஸ்ப்ளே திரவநிலை காட்சி போன்றவற்றையும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் தொடுமாதிரி விகிதத்தையும் கொண்டுள்ளது.

இந்த ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது SoC சிப்செட் வசதி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வசதியைக் கொண்டதாக உள்ளது.
இந்த ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி இரட்டை வைஃபை தொழில்நுட்பத்தை கொண்டதாகவும், இயங்குதளத்தினைப் பொறுத்தவரை Android 11 ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இது 65W SuperVOOC 2.0 ஃப்ளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி 4350 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 4 மணி நேர வீடியோ பிளேபேக்கை வழங்குவதாகவும் உள்ளது.
இந்த ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது.