Mobile

சீனாவில் களம் இறங்கிய ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ரெனோ 5 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனம் ஓப்போ ரெனோ 5 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஓப்போ ரெனோ 5 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஓப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அரோரா ப்ளூ, மூன்லைட் நைட் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

ஓப்போ ரெனோ 5 5ஜி ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினையும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.

சீனாவில் களம் இறங்கிய ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ரெனோ 5 ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரையில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் கேமரா அளவினைப் பொறுத்தவரை ஓப்போ ரெனோ 5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா போன்றவற்றினையும் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 11 மூலம் கலர் ஓஎஸ் 11.1 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் ஒப்போ ரெனோ 5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4300 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 65 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

ரூ.1000 விலைக்குறைப்பைப் பெற்றுள்ள ரியல்மி 5 ப்ரோ!!

TechNews Tamil

வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் உடன் அறிமுகமானது நோக்கியா C5 Endi ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆஃபர்களுடன் விற்பனைக்கு வந்துள்ள Vivo U20!

TechNews Tamil