Mobile

ஒப்போ நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ள ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன்!!

ஒப்போ ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போனை சீனாவில் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் இது 2400×1080 பிக்சல் திரை தெளிவுத்திறன் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது, மேலும் இது 65 வாட்ஸ் சூப்பர் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ள ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன்!!

ஒப்போ ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 720 சிப்செட் அம்சத்தினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 48 எம்பி பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் எல்இடி ப்ளாஷ் போன்றவற்றினையும், முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் வசதி கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் கொண்டுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, இரட்டை 4 ஜி அம்சம் யூ.எஸ்.பி-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

வெளியானது அதிரவைக்கும் அம்சங்களுடன் Honor V30 Pro!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் ஒப்போ ரெனொ 8டி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அறிமுகமானது நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனின் மெலோவர் பதிப்பு!!

TechNews Tamil