Mobile

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் பிரைட்நஸ் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 700 சிப் உடன் SA/NSA டூயல்-மோட் 5ஜி நெட்வொர்க் ஆதரவைக் கொண்டுள்ளது.

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ColorOS 11.1 ஒஎஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி மேக்ரோ கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

இந்த ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மெமரி அளவினைப் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

இது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அசத்தலான அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமானது ரியல்மி வி 5 5 ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் வெளியாகியுள்ள அல்காடெல் 1வி பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அதிரடியான ஐபோன் 11 இன் சிறப்பு அம்சங்கள்!!

TechNews Tamil