மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ15 எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஒப்போ ஏ15எஸ் மாடல் ஆனது 6.55 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் மற்றும் IMG PowerVR GE8320 GPU கொண்டுள்ளது.

ஒப்போ ஏ15எஸ் மாடல் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2 கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4230 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.