Mobile

இந்தியாவில் வெளியானது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் IMG பவர்விஆர் GE8320 GPU, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியானது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்!!

மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4230 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

மேலும் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்ட்ரி புளூ நிறங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

2020 ஆம் காலாண்டில் 29 சதவீதம் சரிவடையும் மொபைல் போன் விற்பனை!!

TechNews Tamil

ஒருவழியாக வெளியானது கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன்… படுகுஷியில் பயனர்கள்!!

TechNews Tamil

சீனாவில் நாளை அறிமுகமாகிறது ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil