Mobile

முக்கிய அம்சங்களுடன் Oppo K3 ஸ்மார்ட்போன்!

ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ கே3 என்ற ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. சீனாவில் இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த போனின் சிறப்பம்சத்தைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்று எதிர்பார்ப்போடு உள்ளனர். 

ஒப்போ கே3 ஸ்மார்ட்போனை, விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாக அதிகாரப் பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய அம்சங்களுடன் Oppo K3 ஸ்மார்ட்போன்!

ஒப்போ கே3 இல் 6.5 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 9.0 பை, 3765 mAh பேட்டரி சக்தி, டைப் சி சார்ஜர், கொரிலா கிளாஸ், இன் டிஸ்ப்ளே விரல் ரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசசர், கேம் பூஸ்ட் 2.0 உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. 

கேமராவைப் பொறுத்தவரையில், 16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2 மெகா பிக்சல் செகண்டரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா உள்ளது.

ஒப்போ K3 ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு வேரியண்டாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி / 128ஜிபி / 256ஜிபி மெமரியும் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹூவாய் போனை பயன்படுத்தும் ஒன் பிளஸ் விளம்பர தூதர்!

TechNews Tamil

அறிமுகமானது Tecno Spark Go Plus ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil