ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,
- ஒப்போ கே1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை – ரூ.14,990 தற்போதைய விலை ரூ.13,990
இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2340×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர் உடன் அட்ரினோ 512ஜிபியு வசதி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மையானது.
கேமராவைப் பொறுத்தவரை முன்புறத்தில் 25எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது, மேலும் பின்புறத்தில் 16எம்பி, 2எம்பி டூயல் ரியர் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்பிளே கைரேகை சென்சார், வாட்டர் டிராப் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 3600எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.