Mobile

ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஓப்போ ஏ32 ஸ்மார்ட்போன்!

ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ32 ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டு உள்ளது, இந்த ஸ்மார்ட்போன்  குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஒப்போ ஏ32 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஓப்போ ஏ32 ஸ்மார்ட்போன்!

இந்த ஒப்போ ஏ32 ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ32 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றையும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் அசரவைக்கும் சலுகைகளுடன் ப்ளிப்கார்ட்டில் விற்பனை!!

TechNews Tamil

ரோக் போன் 3 இன் புதிய வேரியண்ட் இத்தாலியில் அறிமுகம்!!

TechNews Tamil

ரூ.17,990/-க்கு சாம்சங் 32-இஞ்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

TechNews Tamil