ஒப்போ நிறுவனம் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் OLED ஸ்கிரீன் வசதி கொண்டதாக உள்ளது.
ஒப்போ பைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12 ஜிபி + 512 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.1,67,300
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 வசதி கொண்டுள்ளது, மேலும் இது 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.
மேலும் இது அட்ரினோ 650 GPU வசதி கொண்டதாக உள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 256 ஜி.பி. UFS 3.0 மெமரி வசதி கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர் ஒ.எஸ். 7.1 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாய் உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 48 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 13 எம்.பி. டெலிபோட்டோ கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன், முன்புறத்தில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் குறிப்பிடத்தக்க அம்சமாக வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிகள் இதில் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யு.எஸ்.பி. டைப்-சி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1 போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இது 4260 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.