Mobile

விரைவில் வெளியாகவுள்ள ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தற்போது அதன் ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43 இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் 2400 × 1080 பிக்சல் தீர்மானம், 90Hz refresh rate, 20:9 திரைவிகிதத்தினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் அட்ரினோ 619 ஜிபியு வசதி கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சமாக இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி மோனோ லென்ஸ் மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4300எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு எனக் கொண்டால் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவாக 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, இரட்டை சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

மறந்துபோன ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டுகளை கண்டுபிடிப்பது எப்படி?

TechNews Tamil

இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் அறிமுகம்..

TechNews Tamil

ரூ.3,069 விலையில் அறிமுகமான ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil