Mobile

அசர வைக்கும் அம்சங்களுடன் ஓப்போ எஃப்17 ஸ்மார்ட்போனை !!

ஒப்போ நிறுவனம் ஓப்போ எஃப்17 என்ற ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒப்போ எஃப்17 குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் அட்ரினோ 610 GPU வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

அசர வைக்கும் அம்சங்களுடன் ஓப்போ எஃப்17 ஸ்மார்ட்போனை !!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போன் ஆனது கலர் ஒஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 119.9° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ லென்ஸ், 2 எம்பி மோனோ லென்ஸ், 16 எம்பி செல்ஃபி கேமரா போன்றவற்றையும் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டதாகவும் உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 4015 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது

Related posts

அறிமுகமாகின்றது சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது எல்.ஜி. நிறுவனத்தின் டபுள்யூ30 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ. 6,299 விலையில் அறிமுகமான லாவா இசட்71 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil