Mobile

விரைவில் வெளியாக உள்ளது ஒப்போ எஃப்15!!

ஓப்போ நிறுவனத்தின் ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போன் ஆனது ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

சீனாவில் ஒப்போ ஏ91 என்ற பெயரில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2400×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இது AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

விரைவில் வெளியாக உள்ளது ஒப்போ எஃப்15!!

மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியைக் கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர் கொண்டதாக உள்ளது.

இது 900MHz ARM மாலி-G72 MP3 GPU வசதி கொண்டுள்ளது. மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்  கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை

48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா,  2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி கொண்டுள்ளது. இது 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

வெறும் ரூ.12,900 மதிப்பில் அறிமுகமாகியுள்ள ஹானர் பிளே 4 டி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil