Mobile

மார்ச் 11 ஆம் தேதி சர்வதேச சந்தையில் வெளியாகவுள்ள ஒப்போ பிளாக்ஷிப் பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனத்தின் பைண்ட் எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மார்ச் 11 ஆம் தேதி சர்வதேச சந்தையில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன்  6.7 இன்ச் 1440×3216 பிக்சல் Quad HD+ OLED 20.1:9 டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2.84GHz ஆக்டகோர் ஸ்னாப்டிராகன் 888 5nm பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மார்ச் 11 ஆம் தேதி சர்வதேச சந்தையில் வெளியாகவுள்ள ஒப்போ பிளாக்ஷிப் பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன்!!

ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அட்ரினோ 660 GPU வசதியினைக் கொண்டு இயங்கும் என்று தெரிகின்றது.

இயங்குதளம் எனக் கொண்டால் ஆண்ட்ராய்டு 11 கொண்டு இயங்கும்.  கேமரா அளவு எனக் கொண்டால்  50 எம்பி பிரைமரி கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 , யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.  பேட்டரி அளவாக 4500 எம்ஏஹெச் பேட்டரி, மற்றும் 65 வாட் சூப்பர்வூக் 2.0 பிளாஷ் சார்ஜ், 30 வாட் வூக் ஏர் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

அடுத்த வாரம் வெளியாகவுள்ள நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

எல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள எல்ஜி கே42 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

13999 ரூபாயில் மோட்டோ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

TechNews Tamil