Mobile

அசர வைக்கும் அம்சங்களுடன் ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் மேலும் 60Hz refresh rate வசதியைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட் உடன் IMG 9XM-HP8 GPU வசதி கொண்டதாகவும் உள்ளது. இயங்குதளம் எனக் கொள்ளும்போது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

அசர வைக்கும் அம்சங்களுடன் ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மெமரி அளவு எனக் கொண்டால் இந்த ஸ்மார்ட்போன் 8GB of LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

கேமரா அளவு எனக் கொண்டால் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி மோனோ லென்ஸ் போன்றவற்றினையும் 32எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு எனக் கொண்டால் 4310எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30W VOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. இணைப்பு ஆதரவாக 4 ஜி எல்டிஇ, வைஃபை 2.4 ஜிகாஹெர்ட்ஸ், 5.1 ஜிகாஹெர்ட்ஸ், 5.8 ஜிகாஹெர்ட்ஸ், புளூடூத் 5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

இலவச ரிப்பேர் செய்துதர திட்டமிட்டுள்ள நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

Vivo V17 ஸ்மார்ட்போனுக்கு இலவசமாக Vivo Y11 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil