Mobile

சீனாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சில்வர், பிளாக், ஆரோரா வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் 20:9 என்ற திரைவிகிதத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.

ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டுள்ளது.

சீனாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டதாகவும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டதாகவும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டதாகவும் உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தபவரை கைரேகை ஸ்கேனர் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

பட்ஜெட் விலையில் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மலிவான விலையில் அறிமுகமான லாவா இசெட்53 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஜியோனி அறிமுகம் செய்துள்ள மேக்ஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil