ஓப்போ நிறுவனம் அதன் Oppo A9 2020 ஒரு மாதத்திற்கு முன்னர் அறிமுகம் செய்தது, இது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தொழில்நுட்பத்தினைக் கொண்டு இருந்ததால் பெருமளவில் வரவேற்பினைப் பெற்றது.
தற்போது இந்த ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. Oppo A9 2020 4 ஜிபி ஸ்மார்ட்போனுக்கு 1000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டது, அதன்படி இது ரூ. 16.990-ல் இருந்து ரூ. 15,990 க்கு கிடைக்கிறது.

ஆனால் ஒப்போ 8 ஜிபி ரேமின் விலையான ரூ. 19,990 இல் எவ்வித மாற்றத்தினையும் செய்யவில்லை. இது வாடிக்கையாளர்களுக்கு வருத்தத்திற்குரிய விஷயமாக அமைந்துவிட்டது.
இந்த Oppo A9 2020 ஸ்மார்ட்போன், Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியது. இந்த போன் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பு வசதி கொண்டதாக உள்ளது.
மேலும் இது 6.5 இஞ்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது octa core Snapdragon 665 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இது 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது.
A9 2020 ஸ்மார்ட்போன் ஒரு குவாட் கேமரா அமைப்பினைக் கொண்டு, 48 மெகாபிக்சல் கேமிரா 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமிரா, 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் போன்றவை இதில் உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.