Mobile

ஓப்போ A9 2020: நாளை முதல் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும்!

ஒப்போ நிறுவனம் ஒப்போ A9 2020 என்ற மலிவு விலை ஸ்மார்ட் போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கேமராவைப் பொறுத்தவரை, குவாட் கேமரா அம்சம் மிகச் சிறப்பான அம்சமாக கருதப்பட்டதுடன், தனி வரவேற்பினைப் பெற்றது என்றே கூறலாம்.

 இதில் உள்ள கேமரா சென்சார்கள் மிகவும் சிறப்பானவை. இந்த ஸ்மார்ட் போனில் ஒரு 48 மெகாபிக்சல்,12 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட பொட்ரைட் கேமரா என மொத்தம் 4 கேமராக்கள் உள்ளது.

ஓப்போ A9 2020: நாளை முதல் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும்!

இந்த கேமரா அமைப்புடனும் அல்ட்ரா நைட் மோட் 2.0 உள்ளது. மேலும் இதில் டிஜிட்டல் ஜுமிங், போட்டோ ஃபிளாஷ், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசர், டச் டு ஃபோகஸ் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது.

 மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளது.

இந்த ஸ்மார்ட் போன் மாடல் 6.5′ இன்ச் எச்டி மற்றும் டிராப் நாட்ச் டிஸ்பிளே போன்றவற்றுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் கொண்டுள்ளது.

இது 4 ஜிபி ராம் மற்றும் 128ஜிபி கொண்டு சேமிப்பு கொண்டு ஒரு மாடலாகவும், 8 ஜிபி ராம் மற்றும் 128ஜிபி சேமிப்பு கொண்ட மற்றொரு மாடலாகவும் அறிமுகமாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் கலர் ஓஎஸ் 6.0.1 உள்ளது. இந்த புதிய ஒப்போ A9 2020 ஸ்மார்ட்போன், அமேசான் தளத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

அதேபோல் ஒப்போ நிறுவனத்தின் ஸ்டோர்களில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அறிமுகமானது Oppo A91 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அதிரடியாக அறிமுகமானது சாம்சங்க் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

டெக்னோ ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil