மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் Oppo A76 என்ற ஸ்மார்ட்போனை மலேசியாவில் வெளியிட்டுள்ளது.
Oppo A76 ஸ்மார்ட்போன் ஆனது 6.56 இன்ச் எச்டி பிளஸ் 720 x 1,612 பிக்சல்கள் தீர்மானத்துடன் 90Hz புதுப்பிப்பு வீதம் கொண்டுள்ளது.
மேலும் Oppo A76 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 680 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

கேமரா என்று கொண்டால் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா வசதி கொண்டுள்ளது.
இணைப்பு விருப்பம் என்று கொண்டால் 4G LTE, 802.11a/b/g/n/ac உடன் டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் v5, USB டைப்-C, USB OTG மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் வசதி கொண்டுள்ளது.
Oppo A76 ஸ்மார்ட்போன் 33W
SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.