மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.
ஒப்போ ஏ56 5ஜி மீடியாடெக் Dimensity 700 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியுடன் Mali-G57 MC2 GPU ஆதர கொண்டுள்ளது.
இயங்குதளமாக கலர்ஓஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதி கொண்டுள்ளது.

ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.
கேமரா அமைப்பாக பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.
ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5.1, வைஃபை 5, 3.5mm ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் கொண்டுள்ளது.