Mobile

ஐரோப்பாவில் ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் ஐரோப்பாவில் ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவீத டிஸ்ப்ளே டூ பாடி விகிதம் மற்றும் 6.51 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மெமரி வசதி எனக் கொண்டால் அட்ரினோ 619 ஜிபீயூ, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் இயங்குவதாக உள்ளது.

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் 48 எம்பி மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவினைக் கொண்டு இயங்குவதாக உள்ளது.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.1 மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகம் செய்துள்ள ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது லெனோவா கே 12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil