Mobile

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது ஓப்போ ஏ53 ஸ்மார்ட்போன்

இந்தோனேசியாவில் ஓப்போ நிறுவனம் ஓப்போ ஏ53 ஸ்மார்ட்போனை இந்த மாதத் துவக்கத்தில் வெளியிட்டது, பயனர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பினைப் பெற்ற நிலையில் இந்த ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது.  

ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் கொண்டதாக உள்ளது, மேலும் பிராசஸர் பொறுத்தவரை ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் கொண்டுள்ளது.

மேலும் இது அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி கொண்டதாகவும் மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது ஓப்போ ஏ53 ஸ்மார்ட்போன்

மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர் ஒஎஸ் 7.2 வசதி கொண்டதாகவும் கேமராவைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Related posts

4000 ஆஃபருடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகவுள்ள நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கியது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil