Mobile

1000 ரூபாய் வரை விலைகுறைப்பினை அறிவித்துள்ள ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்!

ஒப்போ நிறுவனம் சமீபத்தில் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் என்ற மாடலை அறிமுகம் செய்து இருந்தது.

தற்போது ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1.  ஒப்போ ஏ5 2020 3ஜிபி ரேம் ஸ்மார்ட்போனின் பழைய விலை – ரூ.11,990
  2. ஒப்போ ஏ5 2020 3ஜிபி ரேம் ஸ்மார்ட்போனின் புதிய விலை – ரூ.11,490
  3. ஒப்போ ஏ5 2020 4ஜிபி ரேம் ஸ்மார்ட்போனின் பழைய விலை – ரூ.13,990
  4. ஒப்போ ஏ5 2020 4 ஜிபி ரேம் ஸ்மார்ட்போனின் பழைய விலை – ரூ.12,990

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது பாதுகாப்பு அம்சத்திற்காக கார்ணிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

1000 ரூபாய் வரை விலைகுறைப்பினை அறிவித்துள்ள ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்!

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் கொண்டதாகவும், ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மையானதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மோனோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியினைக் கொண்டுள்ளது.

இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாகவும் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார், வைபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அதிரடியாக வெளியானது Huawei Nova 5z!

TechNews Tamil

இந்தோனேசியாவில் அறிமுகமாகியுள்ளது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil