ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ5 2020 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
- ஒப்போ ஏ5 2020 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை- ரூ.14,9990
இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கார்ணிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதாக உள்ளது.

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மையானது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ், 2எம்பி மோனோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இது 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டதாக உள்ளது. இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில், பேஸ் அன்லாக், கைரேகை சென்சார், வைபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.