Mobile

சீனாவில் அறிமுகமானது ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 720 x 1600 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஹீலியோ பி35 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம் எனக் கொண்டால் ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் ColorOS 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

சீனாவில் அறிமுகமானது ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன்!

ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்பாக 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாக உள்ளது.

ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் 4230 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

இது இரட்டை சிம், வைஃபை , புளூடூத், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இணைப்பு ஆதரவு கொண்டதாக உள்ளது.

Related posts

இந்தியாவில் ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

சீனாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி W21 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil