Mobile

அறிமுகமானது அசத்தல் அம்சங்களுடன் Oppo A31 ஸ்மார்ட்போன்!!

ஓப்போ நிறுவனத்தின் Oppo A31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1.      Oppo A31 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.11,490

2.      Oppo A31 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.13,990

அறிமுகமானது அசத்தல் அம்சங்களுடன் Oppo A31 ஸ்மார்ட்போன்!!

.Oppo A31 ஸ்மார்ட்போன் ஆனது கலர்ஓஎஸ் 6.1.2 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.

இந்த Oppo A31 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி + 720×1,600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது octa-core MediaTek Helio P35 SoC கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் ஆப்ஷன்களைக் கொண்டதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் இது முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 128 ஜிபி வரை உள்ளடக்க மெமரியினைக் கொண்டுள்ளது,  இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

மேலும் இணைப்பு விருப்பத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, MicroUSB மற்றும் 3.5mm headphone jack போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4,230 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

ரூ. 82,125 ரூபாயில் ஹூவாய் பி40 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

புத்தாண்டை ஒட்டி வெளியாகவுள்ள கேலக்ஸி எஸ்10 லைட்!!

TechNews Tamil

இன்று அறிமுகமாகும் லெனோவா Z6 ப்ரோ!

TechNews Tamil