Mobile

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 5 வருடங்கள் கழித்து Oppo A31!

ஓப்போ நிறுவனம் புதிய Oppo A31 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது, 2015 ஆம் ஆண்டு ஏற்கனவே A31 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த Oppo A31 ஸ்மார்ட் போன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்தோனேசியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

1. Oppo A31 ஸ்மார்ட்போனின் விலை – ரூ.13,500

இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 5 வருடங்கள் கழித்து Oppo A31!

இந்த ஸ்மார்ட்போன் டூயல்-சிம் கொண்டதாக உள்ளது, மெமரியினைப் பொறுத்தவரை இந்த போன் 4GB RAM மற்றும் 128GB சேமிப்பினைக் கொண்டதாக உள்ளது. இந்த Oppo A31 ஸ்மார்ட்போன், 6.5 inch HD உடன் 720×1,600 pixels தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 4230mAh பே ட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது மேலும் இது rear fingerprint சென்சாரைக் கொண்டுள்ளது.

Oppo A31 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராவையும், முன்புறத்தில் ஒரு கேமராவையும் கொண்டுள்ளது. பின்புறத்தில் 12 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர், 2 மெகாபிக்சல் depth சென்சார் போன்றவற்றினைக் கொண்டு உள்ளது. மேலும் முன்பக்க கேமராவில், waterdrop-style notch உள்ளது.

இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை 4G/LTE, Wi-Fi மற்றும் Bluetooth 5.0, MicroUSB port மற்றும் 3.5mm headphone jack போன்றவற்றைக் கொண்டு உள்ளது.

Related posts

Oppo A9 2020 ஸ்மார்ட்போனுக்கு 1500 ரூபாய் தள்ளுபடி!!

TechNews Tamil

விற்பனைக்கு வந்துள்ள ரியல்மி நர்சோ 10A ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது லாவா இசட்53 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil