ஒப்போ நிறுவனம் தற்போது புதிய ஒப்போ ஏ11கே என்ற ஸ்மார்ட்போனை ஸ்பெயினில் அறிமுகம் செய்தது.
ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் 6.22 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட்தாகவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதி கொண்டதாகவும் மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகவும் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றையும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும், எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற ஆதரவுகளை கொண்ட்தாகவும் உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை ஓப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்ட்தாகவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4230எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை கைரேகை ஸ்கேனர் வசதி மற்றும் இரட்டை சிம், 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.