மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் ஏ53 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஒப்போ ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 90Hz LCD ஸ்கிரீன் அளவினைக் கொண்டதாகவும், மேலும் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.
ஒப்போ ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக், பர்ப்பிள் மற்றும் கிரீன் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் ஒப்போ ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் மாலி-G57 MC3 GPU வசதியினைக் கொண்டதாகவும், மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 128 ஜிபி (UFS 2.1) மெமரி கொண்டுள்ளது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை கலர் ஒஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாகவும், மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டதாகவும் உள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4040mAh பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18 வாட் சார்ஜிங் கொண்டதாகவும் உள்ளது.