ஓப்போ F11 ப்ரோ மார்ச் மாதத்தில் இந்தியாவில் விற்பனையைத் துவங்கியது. சிறப்பான விற்பனையைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனில், பல்வேறு அம்சங்கள் திருத்தப்பட்டுள்ளன.
அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் இந்த ஆஃபர் கிடைக்கப் பெறாது. ஓப்போ ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கக்கூடியதாக உள்ளது.
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வேரியண்டின் ஓப்போ F11 விலை ரூ. 16,990 என்று அதிகாரப்பூர்வ ஓப்போ இந்தியா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் ஓப்போ F11 ப்ரோ, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வகையின் விலையினை ரூ. 21,990 இருந்து ரூ. 19,990 ஆக குறைத்துள்ளது.

ஓப்போ F11 ப்ரோ, இந்தியாவின் 48 மெகாபிக்சல் கொண்ட முதன்மை பின்புற கேமராவாக அறிமுகமானது. ஓப்போ F11 வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் கொண்டுள்ளது.
டூயல் சிம் ஓப்போ F11 ப்ரோ Android 9 Pie கலர் OS 6 உடன் இயங்கும் தன்மையானது. 6.53-inch full-HD+ (1080×2340 பிக்சல்கள்) டிஸ்ப்ளே போன்றவையும் இதில் அடங்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 4,000 mAh பேட்டரியை கொண்டதாக உள்ளது.