ஒப்போ நிறுவனத்தில் A5 2020 போனின் விற்பனை இன்று துவங்கியுள்ளது. இந்த போன் கடந்த வாரம் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
இதன் விற்பனையானது ஆன்லைனைப் பொறுத்தவரை அமேசான் தளத்திலும் ஒப்போ ஸ்டோர்களிலும் கிடைக்கும்.
3ஜிபி ரேம் சேமிப்பு கொண்ட வகையின் விலை 12,490 ரூபாய் ஆகும். 4 ஜிபி ரேம் சேமிப்பு கொண்ட வகையின் விலை 13,990 ரூபாய் ஆகும்.

எச்.டி.எப்.சி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு 5 சதவிகித கேஷ் பேக் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபராக 1,500 ரூபாய் தள்ளுபடியும் உண்டு.
இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் மூலம் இயங்குகிறது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பு, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 எஸ்.ஓ.சி, 5000 எம்.ஏ.எச் பேட்டரி போன்றவையும் இதில் உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, 4 பின்புற கேமராக்கள் உள்ளன. 12 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா போன்றவையும் இதில் அடக்கம். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டுள்ளது.