எவ்வளவு காசு கொடுத்து, எவ்வளவு காஸ்ட்லியான போன் வாங்கினாலும், ஆப்பிள் ஸ்மார்ட்போனுக்கு நிகர் எதுவும் கிடையாது. பல இளைஞர்களின் ஆசை ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பதே ஆகும்.
எவ்வளவு விலையாக இருந்தாலும், ஆப்பிள் ஐபோனுக்கு இருக்கும் மவுசு என்றும் குறைந்தபாடில்லை. ஆப்பிள் 5 ஜி ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிடும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் நிறுவனங்களுக்கான ஆண்டு பங்குதாரர்கள் சந்திப்பு நடைபெற்றது, இந்த சந்திப்பில் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

வாடிக்கையாளர்கள் பலரும் ஆப்பிளின் 5 ஜி ஸ்மார்ட்போன்களை எதிர்நோக்கி உள்ளனர். இந்தநிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் ஸ்டோர்களை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஆன்லைன் ஸ்டோர்கள் நிறுவப்பட்ட பின்னர், அடுத்த கட்டமாக 2021 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஆப்பிள் விற்பனை மையங்களை இந்தியாவில் அமைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.