Information Technology

கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகளின் ஆன்லைன் பணப் பரிமாற்ற வசதி தடை… ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு!!

ஏடிஎம்  மூலம் நடக்கும் குற்ற சம்பவங்களைத் தடுக்க டெல்லி மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு சில நடவடிக்கைகளை பரிந்துரை செய்தது.

இரண்டு ஏடிஎம் ட்ரான்ஸாக்ஷனுக்கு இடையில் 6 முதல் 12 மணி நேரம் வரை இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறியது.

மேலும் இந்தக் குழுவானது அதிக அளவிலான மோசடிகள் இரவு நேரங்களில் நடப்பதை உறுதி செய்தது.

மேலும் இந்தக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு நடவடிக்கையானது, ஏடிஎம்மில் இருந்து 10000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வாடிக்கையாளர்கள் பெற விரும்பினால் ஓடிபி முறை செயல்படுத்த வேண்டும் என்று கூறியது.

கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகளின் ஆன்லைன் பணப் பரிமாற்ற வசதி தடை… ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு!!

அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கி மற்றுமொரு திட்டத்தினை மோசடிகளைத் தடுக்க அறிவித்துள்ளது. அதாவது இதுவரை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளில் ஒரு முறை கூட ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாத நபர்களின் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறையினை நிரந்தரமாக முடக்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்தத் திட்டமானது மார்ச் 16 முதல் செயல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்கள், பெரும்பாலும் இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாவதால், இதுபோன்ற கடுமையான திட்டங்களை செயல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

பயனர்கள் தங்களது டெபிட் மறறும் கிரெடிட் கார்டுகளை ஆன்லைன் மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கு நிரந்தரமாகத் தடுக்க விரும்பவில்லை எனில் மார்ச் 16வரை அவகாசம் அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது 2007 ஆம் ஆண்டு கொடுப்பனவு மற்றும் தீர்வு முறைகள் சட்டத்தின் பிரிவு இன் கீழ் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

ஆப்பிள் நிறுவனத்திற்கு 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம்!!

TechNews Tamil

ஜியோ அறிவித்த புதிய டாக்-டைம் திட்டங்கள்!

TechNews Tamil

ஒரு நாளைக்கு 33GB டேட்டா- அதிரடியான ஆஃபர்களை வெளியிடும் BSNL!

TechNews Tamil