ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் டிவி பற்றிய அறிவிப்பினை அதிரடியாக வெளியிட்டுள்ளது.
ஒன்பிளஸ் டிவி 55-இன்ச் QLED டிஸ்ப்ளே திரையை கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 4K தெளிவுத்திறன் குவாண்டம் டாட் அல்லது QLED டிஸ்ப்ளே பேனல்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும் OLED பேனல்களைக் காட்டிலும் மலிவானது.
ஒன்பிளஸ் டிவி அடுத்த மாதம் உலகளவில் அறிமுகமாகும், மேலும் இந்தியாவில் முதன்முதலில் அறிமுகமாகும் என்பதை ஏற்கனவே அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது.

பட்ஜெட் விலையில் வெளியிட, அதிக விலையுயர்ந்த OLED தொழில்நுட்பத்திற்கு பதிலாக QLED பேனல்களைப் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் உறுதியாகியுள்ளன. கூகுளின் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தின் திருத்தப்பட்ட பதிப்பை ஒன்பிளஸ் டிவி இயக்கவுள்ளது.
ஒன்பிளஸ் டிவியின் அறிமுகம் முன்னர் செப்டம்பர் 26 என்று தகவல் வெளியாகியிருந்தது, ஆனால் இதுவரை நிறுவனத்திடமிருந்து எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த மாத தொடக்கத்தில்,Bluetooth SIG -யின் ஒரு அறிக்கை, ஒன்பிளஸ் டிவி 43-இன்ச் முதல் 75-இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.
பட்ஜெட் விலையில் அறிமுகமாவதால், இது இந்திய சந்தையில் சிறப்பான வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.