ஒன்பிளஸ் நிறுவனம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் டிவியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஒன்பிளஸ் டிவி பற்றிய சிறப்பம்சங்கள் சில கசிந்துள்ளன, அவற்றை இங்கு பார்க்கலா. ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி எட்டு ஸ்பீக்கர்ளை கொண்டிருக்கும், அதிலும் குறிப்பாக இந்த ஸ்பீக்கர்கள் 50வாட்ஸ் அவுட்புட்டினை உருவாக்க கூடியதாக உள்ளது.

இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்கள் 43′ இன்ச், 55′ இன்ச், 64′ இன்ச் மற்றும் 75′ இன்ச் என மூன்று டிஸ்பிளேக்களுடன் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்பிளஸ் நிறுவனம் 55Q1IN, 43Q2IN, 65Q2CN, 75Q2CN, 75Q2US என்ற ஸ்மார்ட் டிவிகளை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள், 4K HDR ஆதரவுடன் கூடிய ஒரு இன்பில்ட் ஸ்மார்ட் AI சேவையுடன் அறிமுகமாகும்.
இந்த டிவிகள் மாலி ஜி 51 ஜி.பீ.யு உடன் மீடியாடெக் எம்டி 5670எஸ்ஒசி செயலி கொண்டு இயங்கும் தன்மையானது.
இந்த டிவிகள் ரூ.40,000 முதல் ரூ.50,000 என்ற விலையில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.