ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் டிவி சமீபத்தில் புது தில்லியில் நடந்த வெளியீட்டு விழாவில் அறிமுகமானது.
1. ஒன்பிளஸ் டிவியின் Q1 55 இன்ச் மாடல் – ரூ.69,900
2. ஒன்பிளஸ் டிவியின் Q1 Pro மாடல் – ரூ. 99,900
என்ற இரண்டு வகைகளில் வெளியானது.

இந்த டிவி 55 இன்ச் அளவிலான டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் இது க்வாண்டம் எல்இடி அல்லது கியூஎல்இடி டிஸ்ப்ளே போன்றவற்றைக் கொண்டுள்ளது.
இந்த டிவியில் மொத்தம் 8 ஸ்பீக்கர்கள், 50W சவுண்ட் அவுட்புட் உடனான sliding soundbar உள்ளது. மேலும் இந்த டிவி ஸ்பீக்கர்கள் ஆனது ஃபார்வர்ட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்தைக் கொண்டுள்ளன.
அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் OnePlus Connect மூலம் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் டிவியை இணைத்துப் பயன்படுத்த முடியும்.
இந்த டிவியில் உள்ள டால்பி விஷன் அட்மோஸ் தொழில்நுட்பம் மிகச் சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ளது
இந்த டிவியில் in-built screen casting திறன்கள் உள்ளன. இந்த டிவியில் உள்ள voice-enabled கூகுள் அசிஸ்டென்ட் வழியாகவும் டிவியினை இயக்க முடியும்.